📞 +94114441110 ✉ info@sintam.lk
English தமிழ் සිංහල

சேவை விதிமுறைகள்

SinTam விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள். 

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட தேதி: 25-06-2026 

1. விதிமுறைகளை ஏற்றுக்கொள்வது. 

SinTam இணையதளம் அல்லது சேவைகளை பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் இவ்விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட ஒப்புக்கொள்கிறீர்கள். இவற்றில் ஏதேனும் ஒன்றை ஏற்கவில்லை என்றால், தளத்தை பயன்படுத்த வேண்டாம். 

2. SinTam பற்றியது. 

SinTam என்பது இலங்கை முழுவதும் வாங்குபவர்களையும் விற்பனையாளர்களையும் இணைக்கும் ஒரு Online சந்தையாகும். பயனர்களால் வெளியிடப்படும் பொருட்கள் அல்லது சேவைகளின் உரிமையாளர், உற்பத்தியாளர், மறுவிற்பனையாளர் அல்லது விநியோகஸ்தர் SinTam இல்லை! 

3. பயனர் கணக்குகள். 

கணக்கை உருவாக்கும் போது சரியான மற்றும் முழுமையான தகவல்களை வழங்க வேண்டும். உங்கள் கணக்கின் உள்நுழைவு தகவல்களின் பாதுகாப்பிற்கு நீங்களே பொறுப்பானவர். உங்கள் கணக்கின் மூலம் நடைபெறும் அனைத்து செயல்பாடுகளுக்கும் நீங்களே பொறுப்பானவர். இவ்விதிமுறைகளை மீறும் கணக்குகளை SinTam இடைநிறுத்த அல்லது நிறுத்த உரிமை கொண்டுள்ளது. 

4. விளம்பரங்கள் மற்றும் உள்ளடக்கம். 

விற்பனையாளர்கள் தங்கள் விளம்பரங்கள் சட்டபூர்வமானவை என்பதை உறுதி செய்ய வேண்டும். தவறான, ஏமாற்றும், அவதூறான, சட்டவிரோதமான அல்லது ஒழுங்கற்ற உள்ளடக்கங்களை வெளியிடக் கூடாது. SinTam எந்த உள்ளடக்கத்தையும் முன் அறிவிப்பின்றி அகற்றும் உரிமையை கொண்டுள்ளது. 

5. வாங்குதல் மற்றும் விற்பனை. 

வாங்குபவர்களும் விற்பனையாளர்களும் தங்களது பரிவர்த்தனைகளுக்கு முழுமையாக பொறுப்பானவர்கள். எந்த பொருள் அல்லது சேவையின் தரம், பாதுகாப்பு, சட்டபூர்வ தன்மை அல்லது கிடைக்கும் நிலை குறித்து SinTam உத்தரவாதம் அளிக்காது. பரிவர்த்தனையை முடிப்பதற்கு முன் தகவல்களை சரிபார்க்க பயனர்கள் கேட்டுக்கொள்ள படுகிறார்கள். 

6. தடைசெய்யப்பட்ட செயல்பாடுகள். 

பயனர்கள் கீழ்க்கண்டவற்றை செய்யக்கூடாது: சட்டவிரோதமான, திருடப்பட்ட அல்லது போலி பொருட்களை வெளியிடுதல். மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுதல். மற்ற பயனர்களை தொந்தரவு செய்தல், மிரட்டுதல் அல்லது துஷ்பிரயோகம் செய்தல். கணக்குகள் அல்லது அமைப்புகளுக்குள் அனுமதியின்றி நுழைய முயற்சித்தல். வைரஸ் அல்லது தீங்கிழைக்கும் மென்பொருட்களை பதிவேற்றுதல். 

7. கட்டணங்கள் மற்றும் சேவை கட்டணங்கள். 

பொருந்தக்கூடிய கட்டணங்கள் தளத்தில் தெளிவாக குறிப்பிடப்படும். பயனர்கள் தங்களது பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய வரிகள் மற்றும் பிற கட்டணங்களுக்கு பொறுப்பானவர்கள். 

8. அறிவுசார் சொத்துரிமை. 

SinTam என்ற பெயர், Logo, இணையதள வடிவமைப்பு மற்றும் உள்ளடக்கங்கள் SinTam-இன் சொத்தாகும். பயனர்கள் தாங்கள் பதிவேற்றும் உள்ளடக்கங்களின் உரிமையை வைத்திருப்பார்கள்; ஆனால் அவற்றை தளத்தில் காட்சிப்படுத்தவும் விளம்பரப்படுத்தவும் SinTam-க்கு உரிமம் வழங்குகின்றனர். 

9. பொறுப்புத் துறப்பு. 

SinTam தளத்தின் பயன்பாடு, பயனர்களுக்கிடையேயான பரிவர்த்தனைகள் அல்லது தளத்தில் வழங்கப்படும் தகவல்களை நம்பி மேற்கொள்ளப்படும் செயல்களால் ஏற்படும் நேரடி அல்லது மறைமுக இழப்புகளுக்கு பொறுப்பாகாது. 

10. தனியுரிமை. 

தனிப்பட்ட தகவல்களின் சேகரிப்பு மற்றும் பயன்பாடு எங்கள் தனியுரிமைக் கொள்கையின்படி நிர்வகிக்கப்படும். 

11. கணக்கு இடைநிறுத்தம் மற்றும் நிறுத்தம். 

இவ்விதிமுறைகளை மீறும் அல்லது தளத்திற்கும் அதன் பயனர்களுக்கும் தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடும் கணக்குகளை SinTam இடைநிறுத்தவோ அல்லது நிரந்தரமாக நிறுத்தவோ முடியும். 

12. விதிமுறைகளில் மாற்றங்கள். 

SinTam எந்த நேரத்திலும் இவ்விதிமுறைகளை மாற்ற அல்லது புதுப்பிக்க உரிமை கொண்டுள்ளது. மாற்றங்களுக்குப் பிறகும் தளத்தை தொடர்ந்து பயன்படுத்துவது, புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகளை ஏற்றுக்கொண்டதாகக் கருதப்படும். 

13. பொருந்தும் சட்டம். 

இவ்விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் இலங்கையின் சட்டங்களின்படி நிர்வகிக்கப்படவும் விளக்கப்படவும் செய்யப்படும். 

14. எங்களை தொடர்புகொள்ள.

 இவ்விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து ஏதேனும் கேள்விகள் இருந்தால், எங்களை தொடர்புகொள்ளவும்: 

  • மின்னஞ்சல்: info@sintam.lk 
  • இணையதளம்: www.sintam.lk